தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Zodiac Signs That Are Going To Experience Raja Yoga Due To The New Action Of Lord Sani

குருவோடு மோதும் சனி.. பூரட்டாதியில் பணமழை.. அதிர்ஷ்டத்தோடு வாழப்போகும் ராஜ ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 23, 2024 09:51 AM IST

Lord Sani: சனிபகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனிபகவான் ஏப்ரல் ஏழாம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இது குரு பகவானின் நட்சத்திரமாக கருதப்படுகிறது.

சனி
சனி

ட்ரெண்டிங் செய்திகள்

சனிபகவான் முப்பது ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்த 2024 ஆம் ஆண்டு சனிபகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. சனி பகவானின் ஒவ்வொரு அசைவும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சனிபகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனிபகவான் ஏப்ரல் ஏழாம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இது குரு பகவானின் நட்சத்திரமாக கருதப்படுகிறது. சனி பகவானின் நட்சத்திர இடமாற்றத்தால் ஒரு சிலர் ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

 

சனி பகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு லாபத்தை தரப்போகின்றது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆடம்பர வசதிகள் உங்களைத் தேடி வரும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பழைய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

மிதுன ராசி

 

சனி பகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சுப யோகத்தை கொடுக்கப் போகின்றது. ஏப்ரல் மாதம் முதல் உங்களுக்கு ராஜயோகம் கிடைக்கப்போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமும் இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து முன்னேற்றம் அடையும்.

ரிஷப ராசி

 

சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்