Lord Venus: பணத்தில் விளையாடும் சுக்கிரன்.. அதிர்ஷ்டத்தில் அமரும் ராசிகள்.. துள்ளி குதிக்க போவது யார்?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Venus: பணத்தில் விளையாடும் சுக்கிரன்.. அதிர்ஷ்டத்தில் அமரும் ராசிகள்.. துள்ளி குதிக்க போவது யார்?

Lord Venus: பணத்தில் விளையாடும் சுக்கிரன்.. அதிர்ஷ்டத்தில் அமரும் ராசிகள்.. துள்ளி குதிக்க போவது யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jul 03, 2024 09:46 AM IST

Lord Venus: சுக்கிரன் கடந்த ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமானார். சுக்கிரனின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சுக்கிரனின் உதயத்தால் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

பணத்தில் விளையாடும் சுக்கிரன்.. அதிர்ஷ்டத்தில் அமரும் ராசிகள்.. துள்ளி குதிக்க போவது யார்?
பணத்தில் விளையாடும் சுக்கிரன்.. அதிர்ஷ்டத்தில் அமரும் ராசிகள்.. துள்ளி குதிக்க போவது யார்?

இது போன்ற போட்டோக்கள்

சுக்கிரன் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. அந்த வகையில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடிய சுக்கிர பகவான் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வந்தார்.

சுக்கிரன் கடந்த ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமானார். சுக்கிரனின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சுக்கிரனின் உதயத்தால் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

துலாம் ராசி

உங்கள் ராசிகள் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் உதயமாகியுள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைத்து வருகிறது. மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். உங்களுடைய ஆசைகள் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க உள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி காண்பார்கள். மேற்படிப்புக்காக வெளிநாட்டு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

கன்னி ராசி

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சுக்கிரன் உதயமாகின்றார். இதனால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்க உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். நீங்கள் எடுக்க முடிவுகள் உங்களுக்கு ஏற்றவாறு அமையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பழைய முதலீடுகளால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

ரிஷப ராசி

சுக்கிரனின் பயணம் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். நிதி ஆதாயம் அதிகமாக இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நல்ல செய்தி உங்களை தேடி வரும். பரம்பரை சொத்துகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். திட்டமிட்ட வேலைகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். பல்வேறு விதமான வழிகளில் இருந்து உங்களுக்கு பண வரவு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9