தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி காகத்தில் ஏறினார்.. முரட்டு யோகத்தில் சிக்கிய ராசிகள்.. விளையாட்டு ஆரம்பமாகிறது

சனி காகத்தில் ஏறினார்.. முரட்டு யோகத்தில் சிக்கிய ராசிகள்.. விளையாட்டு ஆரம்பமாகிறது

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 13, 2024 09:57 AM IST

சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனி பகவான் வரும் ஏப்ரல் ஏழாம் தேதி என்று பூரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்யப் போகிறார்.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

சனிபகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இது அவருடைய சொந்தமான ராசியாகும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசிகள் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனி பகவான் வரும் ஏப்ரல் ஏழாம் தேதி என்று பூரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்யப் போகிறார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் குரு பகவானின் நட்சத்திரத்தில் சனிபகவான் பயணம் செய்யப்போகின்றார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு லாபகரமானதாக இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆடம்பர வசதிகள் அதிகரிக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

ரிஷப ராசி

 

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். எதிர்பார்த்த இடத்தில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதி அதிகரிக்கும். கூட்டுத்தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும்.

மிதுன ராசி

 

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு மங்கள யோகத்தை உருவாக்கியுள்ளது. ஏப்ரல் மாதம் முதல் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது அனைத்து காரியங்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தேர்வில் மாணவர்கள் இந் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். உடன் வேலை செய்பவர்களோடு உங்களுக்கு சுமூகமான பழக்கம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி நிலைமையில் முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel