தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Guru 2024: ரோகிணி பணக்கடலில் விழுந்த ராசிகள்.. குரு குத்தாட்டம் போடுகிறார்.. மூச்சு முட்டப்போகும் ராசிகள்

Lord Guru 2024: ரோகிணி பணக்கடலில் விழுந்த ராசிகள்.. குரு குத்தாட்டம் போடுகிறார்.. மூச்சு முட்டப்போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 11, 2024 12:43 PM IST

Guru Nakshatra transit: குரு பகவானின் ரோகிணி நட்சத்திர பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரோகிணி பணக்கடலில் விழுந்த ராசிகள்.. குரு குத்தாட்டம் போடுகிறார்.. மூச்சு முட்டப்போகும் ராசிகள்
ரோகிணி பணக்கடலில் விழுந்த ராசிகள்.. குரு குத்தாட்டம் போடுகிறார்.. மூச்சு முட்டப்போகும் ராசிகள்

குரு பகவான் கடந்த மே ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார். இந்த ஆண்டு பெரிய கிரகங்களின் இடமாற்றமாக நடைபெற்ற குரு பகவானின் பெயர்ச்சி விமர்சையாக அனைத்து கோயில்களிலும் கொண்டாடப்பட்டது. தேவர்களின் குருவாக திகழ்ந்துவரும் குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் குரு பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில் தற்போது பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூன் 13ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் நுழைகிறார். குரு பகவானின் ரோகிணி நட்சத்திர பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

குரு நட்சத்திர இடம் மாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பல்வேறு வழிகளில் இருந்து பணம் உங்களை தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். செல்வத்தின் வருகை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

மிதுன ராசி

குரு நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை தரப்போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வேலைக்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முயற்சிகளில் நல்ல லாபம் மற்றும் வெற்றி கிடைக்கும். மன உளைச்சலால் ஏற்பட்டு வந்த கஷ்டங்கள் அனைத்தும் குறையும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். நீண்டகால சிக்கல்கள் அனைத்தும் குறையும். குரு நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

கடக ராசி

குரு நட்சத்திர பயணம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை பெற்றுத் தரப் போகின்றது. அபரிமிதமான செல்வத்தையும் நீங்கள் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel