Sun Lord: சூரியனால் கோபுர உச்சியில் அமர போகும் ராசிகள்-let us see the zodiac signs that are fully blessed by sun lord - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sun Lord: சூரியனால் கோபுர உச்சியில் அமர போகும் ராசிகள்

Sun Lord: சூரியனால் கோபுர உச்சியில் அமர போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 14, 2024 04:45 PM IST

சூரிய பகவானால் அதிர்ஷ்டத்தை முழுமையாக பெறுகின்ற ராசிகளை காண்போம்.

 சூரிய பெயர்ச்சி
சூரிய பெயர்ச்சி

சூரிய பகவான் மகர ராசிக்கு இடம் பெறுகின்ற காரணத்தினால் இது மகர சங்கராந்தி என பல பெயர்களில் பொங்கல் திருநாள் பல மாநிலங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

சூரியனின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டாலும் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு சூரிய பகவான் அருளாசி கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மகர ராசி

 

சூரிய பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். பணவரவில் இந்த குறையும் இருக்காது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து ராசிகளுக்கும் நன்மை செய்வது போல உங்களுக்கும் பல்வேறு விதமான நன்மைகளை செய்யப் போகின்றார். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

ரிஷப ராசி

 

சூரிய பகவான் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றார். இவருடைய சஞ்சாரம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டங்களை தேடி வரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

சிம்ம ராசி

 

சூரிய பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். எதிர்பாராத நேரத்தில் சிறப்பான அங்கீகாரம் உங்களுக்கு கிடைக்கும். கூட்டு முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத நேரத்தில் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சாதகமான சூழ்நிலை உண்டாகும்.

விருச்சிக ராசி

 

பல்வேறு வெற்றிகளை கொடுக்க போகின்றார். பயணங்களால் நல்ல பலன்களை கிடைக்கும். மற்றவர்களுக்கும் உங்களுடைய செயல் ஆச்சரியமாக இருக்கும். உறவினர்களால் உங்களுக்கு எந்த சிக்கல்களும் ஏற்படாது. உடன் பிறந்தவர்களுடன் மகிழ்ச்சி உண்டாகும் பணவரவில் எந்த குறையும் இருக்காது. புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9