Lord Mars: செவ்வாய் கொட்டும் பணமழை..யோகராசிகள் இவர்கள்தான்
செவ்வாய் பகவானால் சிறப்பான வாழ்க்கையை பெற்ற ராசிகளை காண்போம்.
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய ஒவ்வொரு இடமாற்றத்தின் பொழுதும் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் சனி பகவான் என் ராசி ஆன மகர ராசியில் நுழைந்தார்.
மகர ராசியில் செவ்வாய் நுழைந்த காரணத்தினால் அவருடைய நான்காம் பார்வை சில ராசிகளுக்கு மிகப்பெரிய பலன்களை கொடுக்க உள்ளது. இவருடைய பார்வையால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
உங்கள் ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. பண வரவில்லை எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கடக ராசி
செவ்வாய் பகவானின் பார்வை உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும். எதிர்பாராத நேரத்தில் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல பழங்கள் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
சிம்ம ராசி
செவ்வாய் பகவானின் நான்காம் பார்வை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும். நிலுவையிலிருந்து வேலைகள் முடிவடையும். மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். வியாபாரம் மற்றும் தொழிலில் லாபம் இரு மடங்காக அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கக்கூடும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9