Tamil News  /  Astrology  /  Let Us See The Zodiac Signs In Which Lord Venus Will Get Luck And Yoga

Sukra Luck: சுக்கிரனின் குபேர யோகத்தை பெறுகின்ற ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 02, 2024 11:43 AM IST

சுக்கிர பகவான் அதிர்ஷ்டத்தை யோகத்தை பெறப்போகின்ற ராசிகளை காண்போம்.

சுக்கிர பகவான்
சுக்கிர பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

இவர் செல்வம், செழிப்பு , ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். சுக்கிர பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். செல்வத்தை அள்ளித்தரும் நாயகனாக விளங்கக்கூடிய சுக்கிர பகவான் தற்போது தனுசு ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த பிப்ரவரி மாதம் மகர ராசிக்குள் நுழைகிறார். வரும் மார்ச் மாதம் மீன ராசியில் பெயர்ச்சி அடைகிறார்.

உச்ச ராசியாக மீன ராசி திகழ்ந்து வருகிறது. வரும் மார்ச் 31ஆம் தேதி அன்று மீன ராசிக்கு இடம் மாறுகிறார். சுக்கிர பகவான் பொதுவாக அனைத்து கிரகங்களின் மாற்றமும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல சுக்கிர பகவானின் இடமாற்றமும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

மீனத்தில் நுழைகின்ற சுக்கிர பகவானால் 12 ராசிகளுக்கும் சாதகமான சூழ்நிலை உண்டாக உள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிர பகவான் சஞ்சாரம் செய்ய உள்ள காரணத்தினால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியிருக்கும். செல்வம் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

கன்னி ராசி

 

சுக்கிரன் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் அமர உள்ள காரணத்தினால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு பணவரவு அதிகப்படுத்தும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு ஜாதகம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

கடக ராசி

 

சுக்கிரன் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் அமர்ந்துள்ளார். கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கக்கூடும். சொந்த தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். திடீரென்று அரசியல் பயணம் மேற்கொள்ள கூடிய சூழ்நிலை உண்டாகும். பெரிய தலைவர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். பல்வேறு விதமான உதவிகள் உங்களைத் தேடி வரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.