Tamil News  /  Astrology  /  Let Us See The Zodiac Signs In Which Lord Venus Gets Lucky

Lord Venus: சுக்கிரனால் பணப்பெட்டியை திறக்கப் போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 24, 2024 11:52 AM IST

சுக்கிர பகவான் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

சுக்கிர பகவான்
சுக்கிர பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் தற்போது தனுசு ராசியில் பயணம் செய்து வரும் சுக்கிர பகவான், பிப்ரவரி மாதம் மகர ராசிக்கு இடம் மாறுகிறார்.

சுக்கிர பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சுக்கிரனின் மாற்றத்தால் சில ராசிகள் யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

உங்கள் ராசிகள் சுக்கிர பகவான் பத்தாவது வீட்டில் தற்போது பயணம் செய்து வருகின்றார். துன்பங்கள் விலகி இன்பங்கள் கிடைக்கும் எடுத்த காரியங்கள் சாதகமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அனைத்து விதமான இன்ப சூழ்நிலையிலும் உங்களுக்கு உருவாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

கன்னி ராசி

 

சுக்கிரன் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்ற காரணத்தினால் உங்களுக்கு சுபயோகம் உருவாகியுள்ளது. பணவரவில் இந்த குறையும் இருக்காது. திடீரென அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் விலகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். மேலும் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். நண்பர்களால் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடக ராசி

 

சுக்கிரன் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். அவர் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் அமர்ந்து பயணம் செய்து வருகின்றார். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உயர் அலுவலர்களிடம் மரியாதை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.