Tamil News  /  Astrology  /  Let Us See The Zodiac Signs Blessed By Lord Mercury

Lord Mercury: புதனால் யோகம் பெறும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 11, 2024 04:27 PM IST

புதன் பகவானால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

ஒருவருடைய ஜாதகத்தில் புதன் பகவான் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு கல்வி, பேச்சு, பகுத்தறிவு உள்ளிட்ட விஷயங்கள் உச்சத்தில் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதன் பகவான் தற்போது பின்னோக்கிய பயணத்தில் வக்ர நிலையில் பயணம் செய்து வருகிறார்.

புதன் பகவான் கடந்த ஜனவரி 2ஆம் தேதி அன்று விருச்சிக ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்தார். தற்போது நேர் பாதையில் புதன் பகவான் பயணித்து வருகின்றார். புதன் பகவானின் இந்த இடமாற்றத்தால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

புதன் பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றார். உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டு முயற்சிகள் வெற்றியை அடையும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியிருக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். குழந்தைகளால் நல்ல செய்தி உங்களைத் தேடி வரும்.

துலாம் ராசி

 

புதன் பகவான் உங்களுக்கு இரண்டாவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றார். உங்களுக்கு நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். திருமண வாழ்க்கையில் இனிமையான தருணங்கள் அமையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். பேச்சால் பல காரியங்கள் வெற்றி அடையும் வேலை செய்யும். இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்ம ராசி

 

புதன் பகவான் உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் பின்னோக்கிய பயணத்தில் இருந்து நிவர்த்தி அடைந்துள்ளார். சூரியனும் புதனும் நண்பர்கள் என்பதால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எந்த சிக்கல்களும். இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பணவரவு இருந்து கொண்டே இருக்கும். வழக்கத்தை விட பண சேமிப்பு அதிகரிக்கும். தாயுடனான உறவு மேம்படும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.