தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Zodiac Signs Afflicted By Lord Mars

Lord Mars: 4 ராசிகளுக்கு சிக்கல்..புரட்டி எடுக்க போகும் செவ்வாய்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 01, 2024 03:01 PM IST

செவ்வாய் பகவானால் துன்பத்தை பெறுகின்ற ராசிக்காரர்களை காண்போம்.

செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

செவ்வாய் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. செவ்வாய் பகவானின் ராசி மாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் நவகிரகங்களின் பல்வேறு விதமான செயல்பாடுகள் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் செவ்வாய் பகவான் ஜனவரி 17 ஆம் தேதி என்று தனுசு ராசியில் உதயமானார். தற்போது தனுசு ராசியில் பயணம் செய்து வரும் செவ்வாய் பகவான் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வரை இதே உதய நிலையில் பயணம் செய்கின்றார்.

செவ்வாய் பகவானின் உதயத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் சிரமப்படும். சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் உதயமாகி உள்ளார். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர்களுக்காக மருத்துவ செலவு செய்யக்கூடிய சூழ்நிலை உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மற்ற ஊழியர்களோடு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக வாய்ப்பு உள்ளது. கடினமாக உழைத்தால் மட்டுமே பலன்களை பெற முடியும்.

கன்னி ராசி

 

செவ்வாய் பகவான் உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் உதயமாகின்றார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு அதிகபட்ச தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மிகவும் தைரியமாக இருக்க வேண்டும். தடைகளில் கடந்து செல்ல மன தைரியம் மிகவும் முக்கியமாகும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் சங்கடங்கள் ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது எச்சரிக்கையாக இருங்கள்.

விருச்சிக ராசி

 

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் உதயமாகின்றார். செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க சற்று தாமதமாகும். மிகவும் கவனமாக செயல்பட வேண்டிய காலம் இது. புதிய திட்டங்கள் மற்றும் புதிய முயற்சிகளை தற்போது தவிர்ப்பது நல்லது.

மகர ராசி

 

பல்வேறு விதமான தடைகள் ஏற்படும் உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் 12-வது வீட்டில் செவ்வாய் பகவான் உதயம் ஆகிவிட்டார். வாழ்க்கையில் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வசதிகள் குறைய கூடிய சூழ்நிலை உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் உண்டாவதற்கான வாய்ப்புகள் அவ்வப்போது கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் எந்த சிக்கல்களும் இருக்காது. குடும்பத்தில் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே சிக்கல்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்