தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Zodiac Sign People Who Are Going To Face Problems Due To The Transit Of Sun Lord

Money Luck: புரட்டி எடுக்க போகும் சூரியன்.. 3 ராசிகளுக்கு கஷ்டம்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 08, 2024 03:49 PM IST

சூரிய பகவானின் இடமாற்றத்தால் சிக்கலை சந்திக்கப் போகும் ராசிக்காரர்களை காண்போம்.

சூரிய பெயர்ச்சி
சூரிய பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகிறார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இவருடைய இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. நவக்கிரகங்கள் அவ்வப்போது ஒரு சில காலம் எடுத்துக் கொண்டு தனது இடத்தை மாற்றுவார்கள். 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சூரிய பகவான் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி அன்று சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் இடம் மாறுகிறார்.

இந்த நேரத்தில் சனிபகவானும் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் சனி மற்றும் சூரியன் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இவர்களுடைய சேர்க்கை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் அசுப பலன்களை பெறப்போகும் மூன்று ராசிகளை இங்கே காண்போம்.

கடக ராசி

 

சூரிய பகவான் உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிரமங்கள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். மன அழுத்தம் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. கோபத்தை கட்டுப்படுத்தினால் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக நடக்கும். வியாபாரத்தில் சில தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகியுள்ளது. மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சிம்ம ராசி

 

சூரிய பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் கவனமாக இருப்பது நல்லது. தேவையற்ற செலவுகளால் சிக்கல்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பண பற்றாக்குறை ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

விருச்சிக ராசி

 

சூரிய பகவான் உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தம் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருப்பது நல்லது. பயணங்கள் செய்யக்கூடிய சூழ்நிலை உண்டாகும். பணம் சம்பாதிப்பதற்காக செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.