Money Luck: தானாக திறந்த அதிர்ஷ்ட கதவு.. சுக்கிரன் கேது சொல்லி அடிப்பார்.. சேர்ந்ததால் கொட்டும் பணமழை-let us see the three rasis who are going to enjoy royal life due to lord venus ketu combination - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: தானாக திறந்த அதிர்ஷ்ட கதவு.. சுக்கிரன் கேது சொல்லி அடிப்பார்.. சேர்ந்ததால் கொட்டும் பணமழை

Money Luck: தானாக திறந்த அதிர்ஷ்ட கதவு.. சுக்கிரன் கேது சொல்லி அடிப்பார்.. சேர்ந்ததால் கொட்டும் பணமழை

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 26, 2024 02:07 PM IST

Lord Venus Ketu: சுக்கிரன் கேது சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோக பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காண்போம்.

Money Luck: தானாக திறந்த அதிர்ஷ்ட கதவு.. சுக்கிரன் கேது சொல்லி அடிப்பார்.. சேர்ந்ததால் கொட்டும் பணமழை
Money Luck: தானாக திறந்த அதிர்ஷ்ட கதவு.. சுக்கிரன் கேது சொல்லி அடிப்பார்.. சேர்ந்ததால் கொட்டும் பணமழை

நவக்கிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தில் ஏற்படுத்தும். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார்.

கேது பகவான் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். அந்த வகையில் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் கன்னி ராசிகள் தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசிகள் பயணம் செய்வார்.

இந்நிலையில் சுக்கிர பகவான் ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று கன்னி ராசியில் நுழைந்தார். அதன் காரணமாக ஏற்கனவே கன்னி ராசிகள் பயணம் செய்து வரும் கேது பகவானுடன் சுக்கிர பகவான் இணைந்துள்ளார். சுக்கிரன் கேது சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோக பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காண்போம்.

கடக ராசி

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் சுக்கிரன் மற்றும் கேது சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். தடைப்பட்டு கடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். செல்வ நிலையில் உங்களுக்கு கணிசமான உயர்வு கிடைக்கும்.

கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். வாழ்க்கையில் அமைதி மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்ம ராசி

உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் சுக்கிரன் மற்றும் கேது சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். பணத்தை சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். பணத்தை சேமிக்க கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.

புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

விருச்சிக ராசி

உங்கள் ராசிகள் 11 வது வீட்டில் சுக்கிரன் மற்றும் கேது சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் கிடைக்கக்கூடும். உங்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த நேரமாக இது அமையும்.

தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அடைந்திருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களை தேடி வர போகின்றது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

தொடர்புடையை செய்திகள்