தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Special Features Of Sri Vasishteswarar Temple Where Lord Saturn Is Worshipped

HT Yatra: சனியின் 1000 ஆண்டுக் கால தவம்.. விமோசனம் கொடுத்த வசிஷ்டேஸ்வரர்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 04, 2024 06:00 AM IST

சனிபகவான் வழிபட்ட ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலின் சிறப்புகள் குறித்துக் காண்போம்.

ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்
ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்

ட்ரெண்டிங் செய்திகள்

கர்ம வினைகளின் நாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான். காவிரி நதியின் கிளை நதிகளுக்கு இடையே ஓடக்கூடிய திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் வழிபாடு செய்துள்ளார். அப்படி என்ன இந்த கோயிலில் சிறப்பு என்பதை இங்கே காண்போம்.

தல வரலாறு

 

ஒரு காலத்தில் மிகப்பெரிய பிரளயம் ஏற்பட்டு இந்த உலகமே நீரில் மூழ்கியிருந்த போது இந்த கோயிலிருந்த இடம் மட்டும் நீரில் மூழ்காமல் இருந்துள்ளது. இந்த இடத்தில் சிவபெருமான் சுயம்புலிங்கமாகக் காட்சி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பாவ விமோசனம் பெறுவதற்காக இந்த திருத்தலத்திற்கு வந்து வேதாகமம் முறைப்படி சனி பகவான் ஈசனின் ஆயிரம் ஆண்டுக் காலம் பூஜித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கடுமையான தவத்திலிருந்து சனி பகவானுக்குச் சிவபெருமான் இங்குப் பாவ விமோசனம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இங்கு இருந்த பசு குதிரை சந்திரன் உள்ளிட்டவற்றுக்குத் தாகம் தீர்வதற்காகப் பசு தீர்த்தத்தைச் சிவபெருமான் சிருஷ்டித்ததாகக் கூறப்படுகிறது.

விஷ்ணு பகவானும், லக்ஷ்மி தேவியும் அரச மரமாகவும், வில்வ மரமாகவும் உருவெடுத்து இந்த திருத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவன் மற்றும் இறைவிக்கு திருத்தொண்டாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த திருத்தலம் பற்றி திருஞானசம்பந்தர் தனது பாடலில் பாடியுள்ளார். காமதேனு மற்றும் ஆதிசேஷன் ஆகிய இருவர்களும் இந்த கோயிலில் வந்து பூசித்ததாகக் கூறப்படுகிறது.

கோயில் சிறப்புகள்

 

இந்த கோயிலில் மூலவராக வீற்றிருப்பவர் வசிஷ்டேஸ்வரர். இந்தக் கோயிலில் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட வருகிறது. மூலவர் ஐந்தாவது லிங்கமாகப் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

இந்த கோயிலில் ஐந்து லிங்கங்கள் இருப்பதால் இந்த திருத்தலம் பஞ்சலிங்க ஷேத்திரம் என அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் வழிபட்டால் பஞ்சபூத திருத்தலங்களில் வழிபட்ட பலன்கள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

அம்பாளின் சன்னதி கோயிலில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த கோயிலின் மேற்கு பக்கத்தில் குரு பகவானுக்கு எனத் தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோயில் குரு பகவானின் தலமாகவும் போற்றப்பட்டு வருகிறது.

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் இந்த கோயில் அமைந்துள்ளது குறிப்பாகக் கூற வேண்டும் என்றால் தஞ்சாவூரில் இருந்து திருக்கருகாவூர் செல்லும் சாலையில் இந்த கோயில் அமைந்துள்ளது. அருகே திருச்சி விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்குச் செல்ல ரயில் நிலையம் பேருந்து வசதி அனைத்தும் உள்ளது. தங்குமிடமும், உணவு வசதியும் இந்த தளத்தில் கிடையாது.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.