Tamil News  /  Astrology  /  Let Us See The Signs That Will Get Good Results From Lord Saturn And Mars

Shani 2024: சனியும் செவ்வாயும் கொட்டும் பணமழை.. இந்த ராசிகளுக்கு தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 13, 2024 10:40 AM IST

சனி மற்றும் செவ்வாய் பகவானால் நல்ல பலன்களை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

சனி மற்றும் செவ்வாய்
சனி மற்றும் செவ்வாய்

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களின் தளபதியாக விளங்க கூடியவர். செவ்வாய் பகவான் இவர் வீரம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். இவர் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய 45 நாட்கள் எடுத்துக் கொள்கிறார்.

சனிபகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் செவ்வாய் மற்றும் சனி இரண்டு கிரகங்களும் ஜனவரி 10ஆம் தேதி அன்று சேர்ந்துள்ளனர். இதனால் லாபத்திருஷ்டி யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தை அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

சனி மற்றும் செவ்வாய் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். அதிர்ஷ்டத்தின் முழு பலன்களும் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் உருவாகும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உயர் அலுவலர்கள் பாராட்டுகளை கொடுப்பார்கள். குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். தொடர்ந்து வந்த சிக்கல்கள் நிறைவடையும்.

கும்ப ராசி

 

சனி மற்றும் செவ்வாய் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் நடக்கும். எதிர்பாராத நேரத்தில் உதவி உங்களுக்கு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

விருச்சிக ராசி

 

செவ்வாயும் சனியும் சேர்ந்து உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைத்த அதிக வாய்ப்பு உள்ளது. சனிபகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை உண்டாக்குவார். பயணங்களால் உங்களுக்கு நல்ல ஆதாயம் உண்டாகும். பணவரவில் குறையும் இருக்காது.

மகர ராசி

 

இரண்டு கிரகங்கள் இணைவதால் உங்களுக்கு சுப பலன்கள் உருவாகப் போகின்றது. சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை உங்களுக்கு லாபத்தை உண்டாக்க போகின்றது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்கள் முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களால் உதவியும் மற்றும் பாராட்டும் கிடைக்கும். சனி பகவான் உங்களுக்கு நிலுவையில் இருந்த வேலைகளை முடித்துக் கொடுப்பார். செவ்வாய் பகவான் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவார். இரண்டு கிரகங்களும் உங்களுக்கு செல்வத்தை கொடுக்க போகின்றனர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.