தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Signs That Sukra Will Get Luxurious Life

Good Luck: விரட்டி தருவார் சுக்கிரன்.. ராஜராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 05, 2024 01:44 PM IST

சுக்ரனின் ஆடம்பர வாழ்க்கை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

சுக்கிர பெயர்ச்சி
சுக்கிர பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் சுக்கிர பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசுக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார்.

அந்த வகையில் சித்திர பகவான் துலாம் ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த டிசம்பர் 25ஆம் தேதி அன்று விருச்சிக ராசிக்குள் நுழைந்தார். இது செவ்வாய் பகவானின் சொந்த ராசியாகும். தற்போது செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரண்டு கிரகங்களோடு சுக்கிரனும் சேர்ந்து பயணம் செய்து வருகின்றார். இந்த மூன்று ராசிகளின் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிகளை இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

சுக்கிரன் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். அதிர்ஷ்டமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காததற்கு வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கணவன் மனைவிக்குரிய அன்பு அதிகரிக்கும். கருத்து வேறுபாடுகள் நீங்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

ரிஷப ராசி

 

சுக்கிரன் உங்கள் ராசியின் அதிபதியாக விளங்கி வருகிறார். உங்களுக்கு எப்போதும் நல்ல பலன்களை அவர் கொடுப்பார். தற்போது அவருடைய இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

கடக ராசி

 

சுக்கிர பகவான் உங்களுக்கு அதிர்ஷ்டங்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களால் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்