தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Signs That Rahu Ketu Lord Is Going To Form The Raja Yoga

2024 Luck: ராகு கேது கொட்டும் யோகத்தை அள்ளப்போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 18, 2024 12:49 PM IST

ராகு கேது பகவானால் ராஜயோகத்தை அமைக்க போகின்ற ராசிகளை காண்போம்.

ராகு கேது
ராகு கேது

ட்ரெண்டிங் செய்திகள்

சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக ராகு மற்றும் கேது வழங்கி வருகின்றனர். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர்கள் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர்.

கடந்த ஆண்டு தங்களது இடத்தை ராகு மற்றும் கேது மாற்றினார்கள். இவர்களுடைய இடமாற்றம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, அதே அளவிற்கு இவர்களுடைய நிலைகளும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு மற்றும் கேது தங்களது நட்சத்திர இடத்தை மாற்றினார்கள்.

ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்திலும், கேது பகவான் சித்திரை நட்சத்திரத்திலும் இடம் மாற்றம் செய்து பயணம் செய்து வருகின்றனர். இவர்களுடைய இடமாற்றம் 12 ராசிகளில் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

ராகுவும் கேதுவும் உங்களது ராசியில் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றனர். உங்களுக்கு திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்ப நிலைமை சீராகும். நிம்மதியான வாழ்க்கை அமையும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சங்கடங்கள் நிவர்த்தி அடையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

ரிஷப ராசி 

 

உங்கள் ராசிகள் ஆறாவது வீட்டில் ராகு கேது பயணம் செய்து வருகின்றனர். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உள்ளது. கிரகம் மாற்றத்தால் உங்களுக்கு வெளிநாட்டில் குடியுரிவதற்கான வாய்ப்புகளும் அமையக்கூடிய சூழ்நிலை உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்திலிருந்து சிக்கல்கள் விலகும். பண வரவில் குறையும் இருக்காது.

மிதுன ராசி

 

இந்த காலகட்டத்தில் உங்களுக்கு காதலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் தொடர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. மாணவர்கள் கல்வியில் சற்று மந்தமாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது.

சிம்ம ராசி

 

ராகு கேது நட்சத்திர மாற்றம் உங்களுக்கு மன தைரியத்தை அதிகப்படுத்த போகின்றது. உங்களுக்கு நெருக்கமாக இருந்தவர்களிடம் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும் மன வரவில் எந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.