தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Signs That Mars And Saturn Together Give Auspicious Life

Money Luck: சனியோடு கைகோர்த்த செவ்வாய்.. ராஜ வாழ்க்கை பெறுகின்ற ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 18, 2024 10:41 AM IST

செவ்வாயும் சனியும் சேர்ந்து சுப வாழ்க்கையை தருகின்ற ராசிகளை காண்போம்.

சனி மற்றும் செவ்வாய்
சனி மற்றும் செவ்வாய்

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய நீதிமான் கிரகமாக விளங்குபவர் சனி பகவான். ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனி பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நன்மை, தீமைகள் என அனைத்து விதமான பிரதிபலன்களையும் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார்.

30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். சனி மற்றும் செவ்வாயின் சேர்க்கை கடந்த ஜனவரி பத்தாம் தேதி உருவாகியுள்ளது. இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அவர்களுக்கு ஏற்படக்கூடிய சுப விளைவுகள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு பாராட்டுகளை கொடுப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

விருச்சிக ராசி

 

சனி மற்றும் செவ்வாய் சேர்ந்து உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். எதிர்பாராத நேரத்தில் சுப பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளில் உருவாக்கி கொடுப்பார்கள். பயணங்களால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

மகர ராசி

 

 

சனிபகவானின் யோகமும் செவ்வாய் பகவானும் பலனும் உங்களுக்கு சேர்ந்து கிடைக்கப் போகின்றது. கூட்டுத்தொழில் முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் மற்றும் பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. சனி பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுப்பார். செவ்வாய் பகவானால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். தேவையான மாற்றங்கள் உங்களுக்கு உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.