தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Venus: குருவும் சுக்கிரனும் சேர்ந்து சிரமப் படுத்தப் போகும் ராசிகள்

Guru Venus: குருவும் சுக்கிரனும் சேர்ந்து சிரமப் படுத்தப் போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 03, 2024 03:15 PM IST

குருவும் சுக்கிரனும் கஷ்டப்படுத்த போகும் ராசிகளை காண்போம்.

குருபகவான், சுக்கிர பகவான்
குருபகவான், சுக்கிர பகவான்

சுக்கிர பகவான் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், மகிழ்ச்சி உள்ளிட்டவர்களுக்கு காரணியாக விளங்கி வருகிறார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார்.

குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஆறு மற்றும் எட்டாவது வீட்டை பார்க்கின்றனர். இதனால் ஷடாஸ்டக யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கமானது 12 ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குரு மற்றும் சுக்கிரன் பார்வையால் உங்களுக்கு சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரம் மற்றும் தொழில் சற்று மந்தமாக இருக்கும். திருமண வாழ்வில் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கன்னி ராசி

 

சுக்கிரன் மற்றும் குருவால் உருவாக்கிய யோகத்தால் சில சிக்கல்கள் ஏற்பட உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. காதல் வாழ்க்கையில் சில சங்கடங்கள் ஏற்படும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மீன ராசி

 

கவனமாக இருப்பது அவசியமாகும். குரு மற்றும் சுக்கிரன் சில தடைகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. வெளியே பயணம் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களோடு மனக்கசப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9