Mars 2024: செவ்வாயால் சிரமப்பட போகும் ராசிகள்
செவ்வாய் பகவானால் சிரமங்களை சந்திக்கப் போகும் ராசிகளை காண்போம்.
நவகிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடியவர் செவ்வாய் பகவான் இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது செவ்வாய் பகவான் தைரியம் தன்னம்பிக்கை வீரம் விடாமுயற்சி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார்.
செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றத்தால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும். செவ்வாய் பகவான் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி அன்று தனுசு ராசிக்குள் நுழைந்தார்.
செவ்வாய் பகவானின் இடமாற்றத்தால் சில ராசிகளுக்கு கடினமான சூழ்நிலை உருவாகப் போகின்றது. இதனால் சங்கடங்களை சந்திக்க போகும் சில ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
மேஷ ராசி
செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சில சாதகமற்ற சூழ்நிலையை உருவாக்கப் போகின்றது. எதிர்பாராத நேரத்தில் செலவுகள் அதிகரிக்கும். திடீர் இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மன அழுத்தம் அதிகரிக்கின்ற காரணத்தினால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
மிதுன ராசி
செவ்வாய் பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்கிடையே சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கை சற்று மந்தமாக இருக்கும். உடன் பிறந்தவர்களால் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பண விரயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. காதல் வாழ்க்கையில் சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிக ராசி
செவ்வாய் பகவானால் சில அசுப பலன்கள் ஏற்படும் உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியமாகும். பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பயணத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9