தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Signs That Are Going To Experience Hardships Due To Lord Mercury

Mercury: விடாமல் அடிப்பார் புதன்.. 3 ராசிகளுக்கு எச்சரிக்கை

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 03, 2024 01:04 PM IST

புதன் பகவானால் கஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகளை காண்போம்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். அந்த வகையில் தற்போது புதன் பகவான் சனி பகவான் ராசியான மகர ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி அன்று மகர ராசியில் புதன் பகவான் அஸ்தமனமானார். ஒரு மாத காலம் இந்த அஸ்தமன நிலையில் புதன் பகவான் பயணம் செய்வார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனம் ஆகி உள்ள காரணத்தினால் உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. காரியத்தில் தடைகள் ஏற்படக்கூடும். வேலை செய்யும் இடத்தில் சிக்கல்கள் வரும். மற்றவர்களுடன் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் அவ்வப்போது நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனம் ஆகி உள்ளார். இதனால் உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தம் ஏற்படக்கூடும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வருவதற்கு சற்று தாமதமாகும். நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் புதன் நஷ்டம் பணமாகியுள்ளார். இதனால் உங்களுக்கு நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பெரிய முதலீடுகளை தற்போது செய்வதில் தாமதம் காட்டினால் நல்லது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வெளிநாடு வேலை செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel