தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Signs That Are Going To Be Troubled By Lord Mercury

Mercury: புதன் புரட்டி எடுக்க போகின்றார்.. தப்பித்துக் கொள்ளுங்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 05, 2024 04:02 PM IST

புதன் பகவானால் சிரமப்பட போகும் ராசிகளை காண்போம்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது புதன் பகவான் தனுசு ராசியில் பயணம் செய்து வருகிறார் பின்னோக்கிய பயணத்தில் இருக்கும் புதன் பகவான் விரைவில் விருச்சிக ராசிக்கு செல்ல உள்ளார்.

புதன் பகவானின் பின்னோக்கிய பயணத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசி

 

புதன் பகவான் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் இருந்து பின்னோக்கிய பயணத்தில் இருக்கின்றார். உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்க சற்று தாமதம் ஆகும். வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் சங்கடங்கள் ஏற்படும். தன்னம்பிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்கிடையே சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை தொடர்பான இடங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ரிஷப ராசி

 

புதன் பகவான் உங்கள் ராசியில் எட்டாம் வீட்டில் பின்னோக்கிய பயணத்தில் இங்கிருந்து வருகிறார். உங்களுக்கு பண விரயம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். அதிக செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிந்தித்து செயல்பட்டு தப்பித்துக் கொள்ளுங்கள்.

மேஷ ராசி

 

புதன் பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் பின்னோக்கிய பயணத்தில் இருந்து வருகிறார். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொறுமையாக இருந்தால் சிக்கலை தவிர்க்கலாம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனத்தோடு இருப்பது நல்லது. பண பரிவர்த்தனைகளின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும் போது பொறுமையாக கையாள வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.