தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Signs Ruled By Lord Saturn

Lord Saturn: சனி மற்றும் சுக்கினால் ராஜயோகம் பெறும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 04, 2024 03:29 PM IST

சனிபகவானால் ராஜயோகம் பெறும் ராசிகளை காண்போம்.

சனிபகவான், சுக்கிர பகவான்
சனிபகவான், சுக்கிர பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் கணக்கெடுத்து சரிசமமாக இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார்.

சுக்கிர பகவான் ஆடம்பர வாழ்க்கையின் அதிபதியாக விளங்கி வருகிறார். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், காதல் உள்ளிட்டவைகளுக்கு அதிபதியாக விளங்கி வருகிறார். சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான ஆடம்பர வாழ்க்கையும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

சனி மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் தற்போது இணைந்து பயணிக்க உள்ளனர் இந்த 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு அதிர்ஷ்ட அண்டாக அமையப் போகின்றது. அப்படி அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.

ரிஷப ராசி

 

இந்த புத்தாண்டில் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்க உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். புதிய தொழில் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். சனி பகவானின் அருள் உங்களுக்கு கிடைக்கும்.

தனுசு ராசி

 

புத்தாண்டில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் நம்பிக்கை அதிகரிக்கும். எதிரியை சமாளிக்கக்கூடிய திறன் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நண்பர்களுடன் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.

மீன ராசி

 

உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வராமல் இருந்த பணம் உங்களைத் தேடி வரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.