Tamil News  /  Astrology  /  Let Us See The Signs In Which Rahu And Ketu Are Going To Give Good Results

Rahu Ketu 2024: ராகு கேது சம்பவம் உறுதி.. பண யோகம் பெறும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 04, 2024 04:59 PM IST

ராகு மற்றும் கேது நல்ல பலன்களை கொடுக்கப் போகும் ராசிகளை காண்போம்.

ராகு மற்றும் கேது
ராகு மற்றும் கேது

ட்ரெண்டிங் செய்திகள்

ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர் ராகு மற்றும் கேது கடந்த அக்டோபர் மாத இறுதியில் இடம் மாற்றம் செய்தனர். வரும் 2024 முழுவதும் இதே நிலையில் பயணம் செய்ய உள்ளனர்.

ராகு மற்றும் கேது நட்சத்திர பெயர்ச்சி அடைய உள்ளனர். இந்த நட்சத்திர பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் இருப்பினும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

ராகு மற்றும் கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வியாபார ரீதியாக உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் ராகு கேது ஏழாவது வீட்டில் உள்ளனர். அதனால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். இந்த காலகட்டத்தில் கண்டிப்பாக உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். இந்த முறை ராகு கேது உங்களுக்கு திருமண பாக்கியத்தை கொடுக்க போகின்றனர்.

மிதுன ராசி

 

இந்த காலகட்டத்தில் உங்களுக்கு காதல் வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பல்வேறு விதமான துறைகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். குழந்தைகளால் ஏற்பட்டு வந்து சிரமங்கள் குறையும்.

சிம்ம ராசி

 

ராகு கேது இந்த காலகட்டத்தில் உங்களுக்கு மன தைரியத்தை அதிகப்படுத்த போகின்றனர். உங்களுக்கும் உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் இடையே இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். அன்புக்குரியவர்களோடு தொடர்பு அதிகமாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.