Lord Mars: செவ்வாய் கொட்ட போகிறார்.. யோகராசிகள் இவர்கள்தான்-let us see the signs in which lord mars is going to give good results - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Mars: செவ்வாய் கொட்ட போகிறார்.. யோகராசிகள் இவர்கள்தான்

Lord Mars: செவ்வாய் கொட்ட போகிறார்.. யோகராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 27, 2023 02:31 PM IST

செவ்வாய் பகவான் நல்ல பலன்களை கொடுக்கப் போகும் ராசிகளை காண்போம்.

செவ்வாய் பகவான்
செவ்வாய் பகவான்

வரும் டிசம்பர் 27ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் குரு பகவானின் சொந்த ராசியான தனுசு ராசிக்கு உள் நுழைகிறார். அதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும் இருப்பினும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் அதுபோல செவ்வாய் பகவானின் இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய சுபதாக்கத்தை ஏற்படுத்த போகின்றது அது எந்தெந்த ராசிகள்.

மேஷ ராசி 

உங்கள் ராசியில் செவ்வாய் பகவான் ஒன்பதாவது வீட்டில் அமரப்போகின்றார். உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை மற்றும் தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கும். அரசியலில் இருக்கக்கூடியவர்களுக்கு நல்ல மாற்றம் அமையும். யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

துலாம் ராசி

 

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் மூன்றாம் வீட்டில் சஞ்சாரம் செய்து வருகிறார். தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைக்கும். அதிக லாபம் உங்களுக்கு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் பண வரவில் இருந்த குறையும் இருக்காது. உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

தனுசு ராசி

 

 

தனுசு ராசியில் செவ்வாய் பகவான் முதல் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் நிவர்த்தி அடையும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழ உள்ளது. நீதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

டாபிக்ஸ்