தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Rasis Who Get Royal Life Due To Transit Of Rahu Ketu

ராகு கேது உச்சக்கட்டம்.. பணத்தில் குளிக்க போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 10, 2024 01:09 PM IST

Rahu Ketu Transit: ராகு கேது இடமாற்றத்தால் ராஜ வாழ்க்கையை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

ராகு கேது பெயர்ச்சி
ராகு கேது பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல இவர்கள் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் தங்களது இடத்தை இருவரும் மாற்றினார்கள்.

ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் பயணம் செய்து வருகின்றனர். இந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்து உள்ளனர். நவகிரகங்கள் ராசி மாற்றம் மட்டுமல்லாது நட்சத்திர மாற்றமும் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

அந்த வகையில் ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திலும், கேது பகவான் சித்திரை நட்சத்திரத்திலும் பயணம் செய்து வருகின்றனர். இதனால் பலன்களை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

மேஷ ராசி

 

ராகு மற்றும் கேது உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்கின்றனர். இதனால் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிம்மதியான வாழ்க்கை அமையும். திருமணத்திலிருந்து தடைகள் அனைத்தும் விலகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

ரிஷப ராசி

 

ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை கொடுத்து வருகிறது. கிரகங்களின் நிலைகளுக்கு ஏற்ப உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். போட்டு தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிய துறைகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மிதுன ராசி

 

ராகு மற்றும் கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். குழந்தைகளால் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்