தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Shani Vakra Palangal 2024: கும்பத்தில் புரட்டி எடுக்கும் சனி.. வக்ரத்தில் கொட்டும் பணமழை.. அந்த அதிர்ஷ்ட 3 ராசிகள் யார்!

Shani Vakra Palangal 2024: கும்பத்தில் புரட்டி எடுக்கும் சனி.. வக்ரத்தில் கொட்டும் பணமழை.. அந்த அதிர்ஷ்ட 3 ராசிகள் யார்!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 15, 2024 02:30 PM IST

சனிபகவானின் வக்கிரப் பெயர்ச்சியால் ராஜ வாழ்க்கையை அனுபவிக்கப் போகும் ராசிகளை காண்போம்.

சனி
சனி

சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனி பகவான் இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். தற்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். 

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் சனி பகவான் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை வக்கிர நிலையில் பயணம் செய்ய உள்ளார். சுமார் 4 மாதங்களுக்கு மேலாக இதே நிலையில் கும்ப ராசியில் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோகத்தை பெற்று தர போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சனி பகவான் உங்கள் ராசியில் 11-வது வீட்டில் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்வின் முக்கிய சூழ்நிலைகளின் முன்னேற்றம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கு இந்த குறையும் இருக்காது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தில் இருக்கப் போகின்றார். இதனால் உங்களுக்கு ஜூன் மாதம் முதல் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப்போகின்றது பணவரவில் இந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும் உறவினர்களால் நிம்மதி இருக்கும். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

விருச்சிக ராசி

 

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் சனிபகவான் பின்னோக்கிய பயணத்தில் இருக்க போகின்றார். இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்த நன்மைகள் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

உறவினர்களால் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். நண்பர்களால் உதவி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு முழு ஆதரவும் கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதி அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel