தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Rasis Which Will Get Raja Yoga Due To Lord Saturn

Sani Rasis:சனி கொடுக்கும் மாற்றம் இந்த ராசிகளுக்கு தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 24, 2024 05:16 PM IST

சனிபகவானால் ராஜ யோகத்தை பெறப்போகின்ற ராசிகளை காண்போம்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களில் சனி பகவான் கடின உழைப்பின் நாயகனாக விளங்கி வருகிறார். நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார் இவர் ஒரு அரசியல் சஞ்சாரம் செய்ய 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

அந்த வகையில் கடந்த ஆண்டு இறுதியில் சனி பகவான் தனது சொந்த ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்யத் தொடங்கினார். வரும் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். இந்த ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்வார்.

நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடிய சூரிய பகவான் சனி பகவானின் சொந்த ராசியான மகர ராசியில் செஞ்சாரம் செய்ய தொடங்கியுள்ளார். மிகவும் மெதுவாக நகர்கின்ற காரணத்தினால் சனிபகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

சனிபகவானில் இந்த பயணம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் இந்த ஆண்டு முழுவதும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சனிபகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பார்க்கும் அளவிற்கு வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மற்றும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷப ராசி

 

பல்வேறு விதமான வாய்ப்புகளை உங்களுக்கு சனி கொடுக்க போகின்றார். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அனைத்தும் உங்களுடைய கட்டுப்பாட்டில் வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணம் சேமிப்பதில் நாட்டம் அதிகரிக்கும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பணவரவில் எந்த சிக்கல்களும் இருக்காது.

மிதுன ராசி

 

சனி பகவான் உங்களுக்கு புதிய வாய்ப்புகளை கொடுக்கப் போகின்றார். செலவுகள் அதிகரிக்கும் ஆனால் சுபச் செலவுகள் அதிகமாக ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு ஏற்றவாறு மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக அமையும். சுப பலன்கள் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்