தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Rasis Which Will Get Full Support Of Fortune From Guru Bhagavan

Guru: குருபகவானால் அமோக அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 01, 2024 05:52 PM IST

Guru Bhagavan: குருபகவானால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறப்போகின்ற ராசிகளை காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இவருடைய இடமாற்றத்தால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும்.

குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார் வருமே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்குள் நுழைகிறார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் இந்த ராசியில் பயணம் செய்ய உள்ளார். ஆண்டிற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குரு பகவான். இவருடைய இடமாற்றத்தால் அற்புதமான பலன்களை பெறப்போகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

மேஷ ராசி

குருபகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை இந்த ஆண்டு அள்ளிக் கொடுப்பார். மே மாதம் தொடங்கியது முதல் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். புதிய வழிகளில் இருந்து பணவரவு இருக்கும் நல்ல செய்தி உங்களை தேடி வரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

வீட்டில் மங்கள காரியங்கள் நிகழக்கூடிய சூழ்நிலை உண்டாகும். சுப பலன்கள் உங்களைத் தேடி வரும். எதிர்பார்த்த காரியங்களில் வசதிகள் அமையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

சிம்ம ராசி

 

குருபகவான் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளார். முன்னேற்றத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பெரிய ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக முடிவடையும். பெரிய லாபம் தரக்கூடிய காரியங்கள் நடக்கும். 

தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றியடையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக உருவாகும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. வருமானம் ஈட்டுவதற்கான புதிய வழிகள் உண்டாகும். நினைத்த ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

மிதுன ராசி

 

குருபகவானின் மாற்றங்கள் காரணமாக உங்களுக்கு சிறப்பான ஆண்டாக இது அமைய உள்ளது. எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் விலகும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். கடின உழைப்பு மிகப்பெரிய வெற்றியை பெற்று தரும். 

திடீரென நிதி ஆதாயம் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் எந்த சிக்கல்களும் இருக்காது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் படிப்படியாக குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.