தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Rasis Which Will Get Bad Results From Transit Of Rahu

Rahu: சிக்கி சிதைய போகும் ராசிகள்.. ராகு பகவான் புகுந்து விட்டார்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 01, 2024 01:01 PM IST

ராகு இடமாற்றத்தால் மோசமான பலன்களை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

ராகு
ராகு

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சொந்த ராசிகள் இல்லாத கிரகமாக விளங்கி வருகின்றனர். இவர்களுடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ராகு பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் சில மோசமான தாக்கத்தை பெறப்போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கன்னி ராசி

 

இந்த ஆண்டு ராகு பகவானின் தாக்கம் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்தும். ராகு பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் இருக்கின்ற காரணத்தினால் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. செய்யும் வேலைகளில் தடைகள் ஏற்படக்கூடும் ஒட்டுமொத்தமாக நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். குடும்ப வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சிக்கல்களில் அமைதியாக இருப்பது நல்லது.

தனுசு ராசி

 

நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாக உள்ளது. உங்களுடைய ராசிகள் நான்காவது வீட்டில் ராகு பகவான் இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்தி பராமரித்துக் கொள்ள வேண்டும் அலட்சியம் காட்ட வேண்டாம்.

கும்ப ராசி

 

ராகு பகவானால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்வி ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரம் மற்றும் தொழில் சற்று மந்தமாக இருக்கும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உறவினர்களால் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்படக்கூடும். பண இழப்புகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel