தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Rasis Where Saturn Will Face Problems

Sani Sadayam: சனியிடம் சிக்கி சிதைய போகின்ற ராசிக்காரர்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 02, 2024 04:53 PM IST

Saturn Transit: சனி பகவானால் சிக்கல்களை சந்திக்க போகும் ராசிகளை காண்போம்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். இதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும்.

சனிபகவான் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி அன்று சதய நட்சத்திரத்தின் மூன்றாம் பாகத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதனுடைய தாக்கம் கட்டாயம் 12 ராசிகளுக்கும் இருக்கும் சில ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

சனிபகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை கொடுக்க போவது கிடையாது. மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது. வெளியே செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பயணங்கள் செய்யும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களால் அலைச்சல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயணங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது.

கடக ராசி

 

சனி பகவான் உங்களுக்கு சிக்கல்களை கொடுக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகியுள்ளது. வேலைக்கு செல்லும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் எந்த பலனும் கிடைக்காது. வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.

துலாம் ராசி

 

சனி பகவான் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை கொடுக்கப் போகின்றார். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களின் மீது கவனமாக இருப்பது நல்லது. பெற்றோருடன் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களிடம் பேசும் போது கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டில் வழி நடத்தினால் நன்மைகள் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.