தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Rasis That Will Get Good Results From Lord Rahu And Ketu

Money Luck: ராகு கேது கொட்டும் ராசிகள்.. அதிர்ஷ்ட யோகம் தொடங்கியாச்சு

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 05, 2024 11:50 AM IST

ராகு மற்றும் கேது பகவானால் நல்ல பலன்களை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

ராகு மற்றும் கேது
ராகு மற்றும் கேது

ட்ரெண்டிங் செய்திகள்

ராகு மற்றும் கேது எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். அதனால் இவர்களை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவானுக்கு பிறகு பக்தர்கள் அச்சப்படும் கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர்.

ராகு மற்றும் கேது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தங்களது இடத்தை மாற்றினார்கள். இந்த ஆண்டு முழுவதும் ஒரே ராசியில் பயணம் செய்ய உள்ளனர். தற்போது ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் பயணம் செய்து வருகின்றனர்.

மேஷ ராசி

ராகு மற்றும் கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நிதி நிலைமை நல்ல முன்னேற்றம் அடையும். நிம்மதியான பெருமூச்சு விடுவீர்கள். திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து தடைகள் அனைத்தும் விலகும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் ராகு மற்றும் கேது அமைந்துள்ளதால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைத்த போகின்றது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். புதிய வீட்டில் குடியுரிவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கலாம். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நிரந்தர வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

சிம்ம ராசி

 

ராகு மற்றும் கேது உங்களுக்கு நல்ல தைரியத்தை கொடுக்கப் போகின்றனர். நெருக்கமானவர்களுக்கு இடையே அன்பு அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நீண்ட நாள் தொடர்பு இல்லாமல் இருந்த நட்புறவுகள் உங்களைத் தேடி வரலாம். மாணவர்கள் எந்த குறையும் இருக்காது. மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.