தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Rasis That Will Get Auspicious Results From Rahu Ketu

Rahu Ketu: ராகு கேது உச்ச வாழ்க்கை.. இந்த ராசிகளுக்கு தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 11, 2024 01:49 PM IST

ராகு கேதுவால் சுப பலன்களை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

ராகு கேது
ராகு கேது

ட்ரெண்டிங் செய்திகள்

ராகு மற்றும் கேது பதினெட்டு மாதங்கள் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்யக்கூடியவர்கள். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு மற்றும் கேது தங்களது இடத்தை மாற்றினார்கள். ராகு பகவான் மீன ராசியிலும் கேது பகவான் கன்னி ராசியிலும் பயணம் செய்து வருகின்றனர். வரும் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளனர்.

இந்த ஆண்டு முழுவதும் ஒரே ராசியில் பயணம் செய்கின்ற காரணத்தினால் இவர்களுடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் சில ராசிகள் அதிரடி அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

ராகு கேது உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றனர். ஏனென்றால் உங்களது ஏழாவது வீட்டில் இவர்கள் பயணம் செய்து வருகின்றனர். திருமண வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். இது நிலைமையில் முன்னேற்றம் உண்டாகும் புதிய முயற்சிகள் கைகூடும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

ரிஷப ராசி

 

ராகு மற்றும் கேது உங்களது ஆறாவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றனர். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். வெளிநாட்டில் குடியேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதிய முயற்சிகள் வெற்றி அடையும்.

மிதுன ராசி

 

ராகு மற்றும் கேது உங்களுக்கு சுக பலன்களை கொடுக்கப் போகின்றனர். காதல் வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குழந்தைகளால் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றபடி வருமானத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்