Budhan Attack: சங்கடங்கள் தரப்போகும் புதன் பகவான்..கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்-let us see the rasis that will face problems due to transit of lord mercury - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Budhan Attack: சங்கடங்கள் தரப்போகும் புதன் பகவான்..கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

Budhan Attack: சங்கடங்கள் தரப்போகும் புதன் பகவான்..கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 31, 2024 02:44 PM IST

Lord Mercury: புதன் பகவானின் இடமாற்றத்தால் சிக்கல்களை சந்திக்க போகும் ராசிகளை காண்போம்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

புதன் பகவான் ஒவ்வொரு முறையும் தனது இடத்தை மாற்றும் பொழுது கட்டாயம் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். இருப்பினும் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர் புதன் பகவான் இவர் கன்னி மற்றும் மிதுன ராசியின் அதிபதியாக விளங்கி வருகிறார்.

புதன் பகவான் தற்போது தனுசு ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி அன்று அதாவது நாளை சனி பகவானின் சொந்த ராசியான மகர ராசிக்கு இடம் மாறுகிறார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மகர ராசிக்கு இடம் மாறும் புதன் பகவானால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றாலும் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில் புதன் பகவானால் சில சிக்கல்களை சந்திக்கப் போகும் ராசிக்காரர்களை இங்கே காண்போம்.

சிம்ம ராசி

 

புதன் பகவான் உங்கள் ராசியில் 11 மற்றும் இரண்டாம் இடத்தில் அதிபதியாக விளங்கி வருகிறார். இவருடைய இடமாற்றம் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் நிகழ்கின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடின உழைப்பு மட்டுமே நல்ல பலன்களை தரும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. 

உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்களிடத்தில் சங்கடங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. விஷ்ணு பகவானை வழிபட்டால் சிறப்பு உண்டாகும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் புதன் பகவான் ஏழாவது வீட்டிற்கு செல்கின்றார். இவர் உங்கள் ராசியின் மூன்று மற்றும் 12வது வீட்டில் அதிபதியாக திகழ்ந்து வருகிறார். புதன் பகவானின் இடமாற்றத்தால் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

வெளியே பயணம் செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் உடமைகளின் மீது எச்சரிக்கை தேவை. அதிகமான உளைச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் இடமாற்றம் செய்யக்கூடிய சூழ்நிலை உண்டாகும். புதன் பகவானால் ஏற்படக்கூடிய சங்கடங்களை தவிர்க்க ஆன்மீக வழிபாடு மிகவும் அவசியமாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9