Guru Palan: குருவால் பண பலம்..இந்த ராசிகளுக்கு தான் யோகம்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Palan: குருவால் பண பலம்..இந்த ராசிகளுக்கு தான் யோகம்

Guru Palan: குருவால் பண பலம்..இந்த ராசிகளுக்கு தான் யோகம்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 03, 2024 04:51 PM IST

குரு பகவானால் உச்சம் செல்ல போகும் ராசிகளை காண்போம்.

Guru Peyarchi
Guru Peyarchi

அந்த வகையில் குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைந்தார்.

குரு பகவானின் நேரான பயணத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் உண்டாகும். அதில் மூன்று ராசிக்காரர்கள் சுகபோக வாழ்க்கையை பெறப்போகின்றனர். இந்த ஆண்டு மே மாதம் வரை சில ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குரு பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோர்களுடன் சமூகமான உறவு உண்டாகும். குரு பகவானின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

ரிஷப ராசி

 

இந்த ஆண்டு குரு பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். உங்கள் ராசியில் 12-வது வீட்டில் குரு பகவான் பயணம் செய்து வருகிறார். உங்களுக்கு நல்ல விதமான பலன்கள் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களுடைய உறவு வலுவாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சிக்கல்கள் முடிவடையும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

சிம்ம ராசி

 

குரு யோகத்தை உங்களுக்கு கொடுக்கப் போகின்றார். உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குரு பகவான் நேரான பயணத்தை தொடங்கியுள்ளார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நடந்து வந்த போராட்டங்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் விலகும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். மன தைரியம் அதிகரிக்கும். உங்கள் கடின உழைப்பால் சூழ்நிலைகள் மாறும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner