Rahu Transit: ராகு பகவானிடம் சிக்கி சிதைய போகும் ராசிகள் இவர்கள்தான்
Rahu Transit: ராகு பகவானால் இந்த ஆண்டு சிக்கலை அனுபவிக்க போகும் ராசிகளை காண்போம்.

நவகிரகங்களின் அசுப கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. ராகு பகவான் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார்.
அதனால் ராகு பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள் ராகு பகவான் எப்போதும் கெட்டது செய்வது கிடையாது. அமருமிடம் பொறுத்து சில நேரங்களில் நன்மைகளையும் செய்வார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் இந்த ஆண்டு முழுவதும் மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்ய உள்ளார்.
ராசி மாற்றம் மட்டுமல்லாது நவகிரகங்களின் மற்ற செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு பகவானின் இடமாற்றத்தால் மோசமான தாக்கத்தை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.
கன்னி ராசி
ராகு பகவானின் தாக்கத்தால் உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் ராசிகள் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்கின்ற காரணத்தினால் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் சில சண்டைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் சில சிக்கல்கள் ஏற்படும். காரிய தடைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வெளியே செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மொத்தத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு ராசி
ராகு பகவான் உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. உங்கள் வாழ்க்கையில் வசதிகள் குறைவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் ராகு பகவான் சஞ்சாரம் செய்து வருகின்றார். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் அதிக கவனம் கொடுத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும். அலட்சியமாக இருந்தால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கும்ப ராசி
ராகு பகவானால் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரத்தில் சில சிக்கல்கள் ஏற்படக்கூடிய தருணங்கள் உண்டாகும். தொழிலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணவரவில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பயணம் செய்யும் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் உடமைகள் மீது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெரிய அளவில் பண இழப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
