தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Rasis That Have Received Raja Yoga Due To Saturn Retrograde Journey

Shani 2024: சனி வக்ர பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு யோகம்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 11, 2024 09:50 AM IST

சனி பகவானின் பின்னோக்கிய பயணத்தால் ராஜயோகத்தை பெற்ற ராசிகளை காண்போம்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த 2023 ஆம் ஆண்டு சனி பகவான் இடமாற்றம் செய்தார். இவர் 2025 ஆம் ஆண்டு வரை இதே ராசியில் பயணம் செய்வார். இந்த ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் பயணம் செய்ய உள்ளார். இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும்.

தற்போது நேராக பயணம் செய்து வரும் சனி பகவான் ஒரு ஜூன் மாதம் வக்ரப் பெயர்ச்சி அடைய உள்ளார். சனி பகவானின் இந்த மாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் சில ராசிகள் நன்மைகளை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சனி பகவானின் பின்னோக்கிய பயணத்தால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. வருமானத்திற்கு எந்த குறையும். இருக்காது. பல்வேறு விதமான வழிகளில் இருந்து உங்களுக்கு பணம் கிடைக்கும். வாய்ப்பு உள்ளது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிய ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக அமையும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கடினமான பாதைகள் உங்களுக்கு பெரிய முன்னேற்றத்தை பெற்று தரும்.

ரிஷப ராசி

 

சனிபகவான் உங்களுக்கு நன்மைகளை கொடுக்க போகின்றார். சனி பகவானின் கருணை உங்களுக்கு எப்போதும் இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். புதிதாக தொழில் தொடங்க வாய்ப்பு உள்ளது. வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. பணவரவில் இருந்த சிக்கல்கள் விலகும்.

மகர ராசி

 

சனிபகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றது. உங்களுடைய வார்த்தைக்கு செல்வாக்கு அதிகரிக்கும். திடீர் பணவரவு இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சிக்கி கிடந்த பணம் உங்களை தேடி வரும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.