தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Rasis That Have Got Rajayoga Due To Transit Of Lord Venus

Sukra Luck: சுக்கிரன் இடம் மாறுகிறார்.. பணவரவில் குளிக்கப் போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 01, 2024 10:33 AM IST

சுக்கிர பகவானின் இடமாற்றத்தால் ராஜயோகத்தை பெற்ற ராசிகளை காண்போம்.

சுக்கிர பெயர்ச்சி
சுக்கிர பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் சுக்கிர பகவான் மகர ராசியில் பயணம் செய்து வருகின்றார். இது சனி பகவானின் ராசியாகும் ஒரு மார்ச் 7ஆம் தேதி அன்று சனி பகவானின் கும்ப ராசியில் நுழைகின்றார். சுக்கிர பகவான் ஏற்கனவே அங்கு சனி பகவான் பயணம் செய்து வருகின்றார்.

சனி மற்றும் சுக்கிரன் இருவரும் ஒன்று சேர போகின்றனர் ஒரு மார்ச் 30ம் தேதி வரை சுக்கிரன் அதே இடத்தில் இருப்பார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

சுக்கிர பகவான் உங்கள் ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கப் போகின்றது. பண வரவில் இருந்த குறையும் இருக்காது. முன்னேற்றத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். பண வரவால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும் வருமானம் அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

துலாம் ராசி

 

சுக்கிரன் உங்களுக்கு அதிக நன்மைகளை கொடுக்க போகின்றார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பெற்றோரார் உங்களுக்கு நல்ல செய்தியை கொண்டு வருவார்கள். மூதாதையர் சொத்துக்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடக ராசி

 

சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும்.

கும்ப ராசி

 

சுக்கிரன் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் சரியான முதலீடு செய்ய இதுவே சரியான தருணம். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய லாபத்திற்கு இதுவே அடித்தளம் ஆகும். பணவரவில் இருந்து குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel