Mars Transit: செவ்வாய் மாற்றத்தால் யோகத்தில் குளிக்கப் போகும் ராசிகள்-let us see the rasis that have gained yoga due to transit of mars - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Mars Transit: செவ்வாய் மாற்றத்தால் யோகத்தில் குளிக்கப் போகும் ராசிகள்

Mars Transit: செவ்வாய் மாற்றத்தால் யோகத்தில் குளிக்கப் போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 09, 2024 10:45 AM IST

செவ்வாய் இடப்பெயர்ச்சியால் யோகத்தை பெற்ற ராசிகளை காண்போம்.

செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் பெயர்ச்சி

நவகிரகங்களின் இடமாற்றத்தால் 12 ராசிகளுக்கும் பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் செவ்வாய் பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் செவ்வாய் பகவான் பிப்ரவரி 5ஆம் தேதி ஒன்று மகர ராசிக்கு இடம் மாறினார்.

மகர ராசி சனி பகவானின் சொந்த ராசியாகும். இந்த ராசியில் ஏற்கனவே சூரியன் மற்றும் புதன் பகவான் இருவரும் பயணம் செய்து வருகின்றனர். இவர்களோடு செவ்வாய் பகவான் இணைகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் பல்வேறு விதமான பலன்களை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

 

செவ்வாய் பகவானின் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்க உள்ளது. நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். திட்டமிட்டபடி அனைத்து செயல்களும் நடக்கும். வீட்டில் இருக்கக்கூடிய பொறுப்புகள் அனைத்தும் சுபமாக நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷப ராசி

 

செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. மன தைரியம் அதிகரிக்கும் கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். சிறப்பான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

கடக ராசி

 

செவ்வாய் பகவான் உங்களுக்கு மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் எந்த சிக்கலும் இருக்காது வருமானம் அதிகரிக்கும். கடன் சிக்கல்கள் குறையும். நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும். திட்டமிட்டபடி வேலைகள் அனைத்தும் நடக்கும். காரிய தடைகள் அனைத்தும் விலகும்.

கன்னி ராசி

 

செவ்வாய் பகவான் உங்களுக்கு அள்ளி கொடுக்கப் போகின்றார். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகமாகும். நீண்ட தூர பயணம் நல்ல பலன்களை பெற்றுத் தரும். எதிர்பாராத நேரத்தில் ஆதாயம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் உறவுகள் பலப்படும். புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக கைகூடும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9