தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Rasis That Have Gained Yoga Due To The New Change Of Lord Sani

Shani Luck: சனி விளையாட்டு ஆரம்பம்.. உதயத்தில் வருகிறது யோகம்.. மார்ச் மாதத்தில் தொடக்கம்.. அதிர்ஷ்ட ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 14, 2024 10:27 AM IST

Shani Luck: சனி பகவானின் ஒவ்வொரு விதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சனி பகவான் கர்ம வினைகளின் நாயகனாக திகழ்ந்து வருகின்றார். அனைத்து பலன்களையும் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் அனைவரும் இவரை கண்டால் அச்சப்படுவார்கள்.

சனி பகவானின் ஒவ்வொரு விதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.

கடந்த பிப்ரவரி மாதம் கும்ப ராசியில் அஸ்தமனமான சனி பகவான் வரும் மார்ச் 18 ஆம் தேதி அன்று உதயமாகின்றார். சனி பகவானின் உதயத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் நல்ல யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் வாழ்க்கையில் சனி பகவானால் சுபிட்சம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் எதிர்பாராத அளவிற்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷப ராசி

 

சனிபகவானால் உங்களுக்கு நல்ல காலம் பிறந்துள்ளது. குடும்பத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிலுவையில் இருந்து வந்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கன்னி ராசி

 

உங்கள் வாழ்க்கையில் லாபகரமான பலன்களுக்கு கிடைக்கப் போகின்றது. சனி பகவான் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார். தொழிலில் நல்ல லாபமும் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். செல்வத்திற்கு எந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நல்ல முன்னேற்றம் உங்களுக்கு உண்டாகும்.

துலாம் ராசி

 

அதிர்ஷ்டத்தின் முழுமையான பலன் சனி பகவான் உங்களுக்கு கொடுக்க போகின்றார். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் உங்களைத் தேடி வரும். கடன் தொல்லைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும் தொழிலில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் குறையும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel