Kubera Yoga: ராகு கேது சொர்க்க பண மழை.. இந்த ராசிகளுக்கு தான்
ராகு கேது நட்சத்திர இடம் மாற்றத்தால் குபேர யோகத்தை பெற்ற ராசிகளை காண்போம்.
நவகிரகங்களில் அசுப கிரகமாக கருதப்படுபவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் நிழல் கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விலகி வருகின்றனர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு மற்றும் கேது 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் ராகு கேது இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் தங்களது இடத்தை மாற்றினார்கள்.
ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் பயணம் செய்து வருகின்றனர். புதிதாக பிறந்த இந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்ய உள்ளனர். மட்டுமல்லாது ராகு கேது இருவரும் நட்சத்திர மாற்றத்தை இந்த ஆண்டு தொடக்கத்திலேயே செய்து விட்டனர்.
ராஜபகவான் ரேவதி நட்சத்திரத்தில் மூன்றாவது கட்டத்திலும், கேது பகவான் சித்திரை நட்சத்திரத்தில் முதல் கட்டத்திலும் நுழைந்துள்ளனர். இவர்களுடைய நட்சத்திர மாற்றத்தால் பலன்களை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.
மேஷ ராசி
ராகு மற்றும் கேது உங்களுக்கு பல மாற்றங்களை கொடுக்கப் போகின்றனர். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். கூட்டுத் தொழில் முயற்சிகள் வெற்றி அடையும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
ரிஷப ராசி
ராகு மற்றும் கேது உங்களுக்கு வருமானத்தில் நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகமாகும். இந்த ஆண்டு உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் மன தைரியம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
துலாம் ராசி
ராகு மற்றும் கேது உங்களுக்கு சிறப்பான பலன்களை தருகின்றனர். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சங்கடங்கள் குறையும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
கும்ப ராசி
ஏற்கனவே உங்கள் ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். ராகு கேது உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். இந்த ஆண்டு உங்களுக்கு சாதகமாக அமையும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. திடீரென்று செல்வம் அதிகரிக்கும். பேச்சு திறமையால் அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக முடிவடையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9