தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Rasis That Get Yoga By The Change Of Guru Bhagavan

Guru Bhagavan: குரு பகவானால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 29, 2024 06:01 PM IST

குரு பகவானின் மாற்றத்தால் யோகத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

Guru Bhagavan
Guru Bhagavan

ட்ரெண்டிங் செய்திகள்

குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். அவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். வருமே ஒன்றாம் தேதி என்று குரு பகவான் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இது சுக்கிர பகவானின் ராசியாகும்.

நவக்கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் கடந்த டிசம்பர் மூன்றாம் தேதி அன்று பரணி நட்சத்திரத்திற்கு இடம் மாறினார்.

குரு பகவானின் நட்சத்திர இடமாற்றத்தால் வரும் ஏப்ரல் மாதம் வரை சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை தரும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடையும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது.

ரிஷப ராசி

 

குருவின் நட்சத்திர பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். ஒவ்வொரு துறைகளிலும் வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.

கன்னி ராசி

 

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. பணம் மற்றும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel