தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Rasis That Get Royal Life Due To The Rise Of Lord Mars

Lord Mars: செவ்வாய் தரும் யோகம்.. ஆடம்பர ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 20, 2024 12:39 PM IST

செவ்வாய் பகவானின் உதயத்தால் ராஜ வாழ்க்கை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

Transit of Mars
Transit of Mars

ட்ரெண்டிங் செய்திகள்

மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடிய கிரகங்களில் இவரும் ஒருவர். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை செவ்வாய் பகவான் மாற்றுகிறார். செவ்வாய் பகவான் கடந்த ஜனவரி 17ஆம் தேதி அன்று தனுசு ராசியில் உதயமானார். பிப்ரவரி 5ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார்.

இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவானின் உதயத்தால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

மேஷ ராசி

 

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் உதயமாக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு அனைத்து காரியங்களும் நிறைவேறும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கையில் உண்டாகும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் செவ்வாய் பகவான் எட்டாவது வீட்டில் உதயமாகின்றார். அதனால் உங்களுக்கு உடல் நலத்தில் சற்று சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களைப் பெற்று தரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கு இந்த குறையும் இருக்காது. திட்டமிட்டு செயல்பட்டால் லாபத்தை பெறலாம்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் செவ்வாய் பகவான் உதயமாகி உள்ள காரணத்தினால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் உண்டாகும். பயணங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடக ராசி

 

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் உதயமாகியுள்ளார். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோருடன் சமூகமான உறவு உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சிகள் அதிகரிக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வருமானத்திற்கு இந்த குறையும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.