தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Rasis That Get Lucky Due To Guru Bhagwan's Transit

Guru Peyarchi: குரு பெயர்ச்சியால் அரியணைகள் ஏறப்போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 23, 2024 10:01 AM IST

குரு பகவானின் இடப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து விதமான ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படுத்தும்.

இந்த வகையில் வரும் மே ஒன்றாம் தேதி என்று குரு பகவான் ரிஷப ராசியில் நுழைகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தின் யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசி

 

குரு பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் சுப பலன்கள் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் குறை இருக்காது. நிதி நிலைமையில் முன்னேற்றம் இருக்கும்.

சிம்ம ராசி

 

குருபகவான் உங்களுக்கு மிகவும் அற்புதமான பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். பணவரவில் இந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

கன்னி ராசி

 

குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. மூதாதையர் சொத்துக்களால் உங்களுக்கு ஆதாயம் கட்டாயம் கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். திட்டமிட்டபடி ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

தனுசு ராசி 

 

குரு பெயர்ச்சி உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தர போகின்றது. வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் .வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தம் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். தொழிலில் புதிய திட்டங்கள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வருமானம் ஈட்டுவதற்கான புதிய வழிகள் உங்களுக்கு திறக்கப்படும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். பண வரவில் இந்த குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்