Lord Venus: சுக்கிர நட்சத்திர பெயர்ச்சி.. 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்
Transit of Venus: சுக்கிரனின் நட்சத்திர இடப்பெயர்ச்சியால் நல்ல யோகத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடிய கிரகங்களில் இவரும் ஒருவர். சுக்கிர பகவானின் இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை அனைத்து ராசிகளுக்கும் ஏற்படுத்தும். சுக்கிர பகவான் அவ்வப்போது நட்சத்திர மாற்றங்களையும் செய்வார்.
இது போன்ற போட்டோக்கள்
Feb 14, 2025 11:11 AMMoney Luck: கொட்டிக் கொடுக்க வரும் குரு.. 2025-ல் ஜாக்பாட் அடிக்கும் 3 ராசிகள்.. பணமழை கொட்டுவது உறுதியா?
Feb 14, 2025 10:18 AMLucky Zodiac : நான்கு கிரகங்களின் அற்புதமான சேர்க்கை.. இந்த 5 ராசிக்காரர்களுக்கு யோகம்.. வாழ்க்கையில் மாற்றம் நிகழும்!
Feb 14, 2025 10:03 AMValentine Day Remedy : காதல் வாழ்க்கையை மேம்படுத்த காதலர் தினத்தில் இதை செய்யுங்கள்.. உறவு வலுவாக இருக்குமாம்!
Feb 14, 2025 07:00 AMGuru Horoscope: கொட்டிக் கொடுக்க வரும் குரு.. 2025-ல் கோடீஸ்வர 3 ராசிகள்.. மகிழ்ச்சி தாண்டவம் ஆடுமா?
Feb 14, 2025 05:00 AMToday Rasipalan : 'கவனமா பேசுங்க.. வெற்றி வந்து சேரும்' இன்று பிப்.14 மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!
Feb 13, 2025 05:45 PMChevvai Rasis: பின்பக்கமாக வரும் செவ்வாய்.. 2025 முதல் முன்பக்கத்தில் பணம் கொட்டும் ராசிகள்.. விரைவில் டும் டும் டும்?
இதனால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும். சுக்கிரன் தற்போது தனுசு ராசியில் பயணம் செய்து வருகின்றார். ஒரு பிப்ரவரி 12ஆம் தேதி அன்று சனிபகவானின் சொந்த ராசியான மகர ராசியில் நுழைகிறார். அதற்கு பிறகு பிப்ரவரி இருபதாம் தேதி அன்று திருவோண நட்சத்திரத்தில் நுழைகிறார்.
சுக்கிரன் சனி பகவானின் ராசியில் நுழைகின்ற காரணத்தினால் சில ராசிகளுக்கு நல்ல யோகம் கிடைக்க உள்ளது. அதே சமயம் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலையும் உருவாக்கி உள்ளது. திருவோணம் நட்சத்திரமானது சந்திர பகவானின் நட்சத்திரமாகும். இதில் சுக்கிரன் நுழைகின்ற காரணத்தினால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
சுக்கிரன் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
தனுசு ராசி
சுக்கிரன் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பணம் வரவை பெற்றுத்தர போகின்றது. வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடக் கூடிய சூழ்நிலை உண்டாகும். குழந்தைகளால் நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும். வீட்டில் வசதிகள் அதிகரிக்க கூடும். அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை கிடைக்கும்.
கும்ப ராசி
சுக்கிரன் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பெரிய வாய்ப்புகளைப் பெற்றுத் தரப் போகின்றது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உருவாகும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் நிதி நிலைமையில் ஏற்றம் உண்டாகும் குழந்தைகளால் நல்ல செய்தி உங்களை தேடி வரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
