Rajayoga Rasis: குருவோடு சேர்ந்து கொட்டுவார் சுக்கிரன்.. கூட்டணியில் பணமழை.. யோகக்கார ராசிகள் இவர்கள்தான்-let us see the rasis in which venus along with guru is going to give rajayoga - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rajayoga Rasis: குருவோடு சேர்ந்து கொட்டுவார் சுக்கிரன்.. கூட்டணியில் பணமழை.. யோகக்கார ராசிகள் இவர்கள்தான்

Rajayoga Rasis: குருவோடு சேர்ந்து கொட்டுவார் சுக்கிரன்.. கூட்டணியில் பணமழை.. யோகக்கார ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 22, 2024 04:02 PM IST

குரு பகவானும் சுக்கிர பகவானும் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மேஷ ராசியில் இணையப் போகின்றன. இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சுக்கிரன்
சுக்கிரன்

தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார் வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார் ஆடம்பர கிரகமாக நவக்கிரகங்களில் விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் குரு பகவானும் சுக்கிர பகவானும் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மேஷ ராசியில் இணையப் போகின்றன. இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குருவும் சுக்கிரனும் சேர்ந்து உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றனர். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகப் போகின்றது. புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழிலில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும்.

ரிஷப ராசி

 

குருவும் சுக்கிரனும் சேர்ந்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றனர். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்கும். பணம் சேமிப்பதில் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதிய மாற்றங்கள் சிறந்த வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும்.

கடக ராசி

 

சுக்கிரனும் குருவும் சேர்ந்து உங்களுக்கு ராஜயோகத்தை கொடுக்க போகின்றனர். ஆடம்பர வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். உங்களுடைய செயலால் காரியம் வெற்றி அடையும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சமூகமான சூழ்நிலை உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் வருமானம் அதிகரிக்கும். நல்ல நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

தனுசு ராசி

 

குருபகவான் மற்றும் சித்திர பகவான் உங்களுக்கு சேர்ந்து அதிக பலன்களை கொடுக்கப் போகின்றனர். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். வருமானம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9