தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Rasis In Which Rahu And Mercury Are Going To Give Good Results

Rahu Mercury: ராகுவும் புதனும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 12, 2024 05:43 PM IST

Rahu Mercury: ராகு மற்றும் புதன் நல்ல பலன்களை கொடுக்கப் போகும் ராசிகளை காண்போம்.

 ராகு மற்றும் புதன்
ராகு மற்றும் புதன்

ட்ரெண்டிங் செய்திகள்

எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடிய இவர்கள், கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் தங்களது இடத்தை மாற்றினார்கள். வரும் 2025 வரை இதே நிலையில் பயணம் செய்ய உள்ளனர். ராகு பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகிறார்.

புதன் பகவான் நவகிரகங்களின் இளவரசன் ஆக விளங்கி வருகிறார். புதன் பகவான் கல்வி, அறிவு, புத்தி கூர்மை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தற்போது தொடங்கியுள்ள 2024 ஆம் ஆண்டில் ராகு மற்றும் புதன் இருவரும் ஒன்றிணைந்து பயணம் செய்கின்றனர். இவர்களுடைய பயணத்தால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கும்ப ராசி

 

ராகு மற்றும் புதன் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். புதிய தொழில் தொடங்க இது சரியான வாய்ப்பாக அமையும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

துலாம் ராசி

 

புதன் மற்றும் ராகு உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. நிலுவையில் இருந்த நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி அடையும். குடும்ப வாழ்க்கையில் உறவுகள் மேம்படும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷப ராசி

 

ராகு மற்றும் புதன் உங்களுக்கு வெற்றிகளை அள்ளிக் கொடுக்கப் போகின்றனர். அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக அமையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் வெற்றியை தேடி தரும். இறக்குமதி தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பங்குச் சந்தையில் முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.