Guru Sevvai: செவ்வாய் மாறுகிறார்..குரு கொட்டுவார்.. வார்த்தைகளில் கவனம் தேவை-let us see the rasis in which lord mars gets millionaire yoga - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Sevvai: செவ்வாய் மாறுகிறார்..குரு கொட்டுவார்.. வார்த்தைகளில் கவனம் தேவை

Guru Sevvai: செவ்வாய் மாறுகிறார்..குரு கொட்டுவார்.. வார்த்தைகளில் கவனம் தேவை

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 05, 2024 12:40 PM IST

Mars Transit: செவ்வாய் பகவானால் கோடீஸ்வர யோகத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் பெயர்ச்சி

கடந்த டிசம்பர் 29ஆம் தேதி முதல் செவ்வாய் பகவானும் சூரிய பகவானும் தனுசு ராசியில் சேர்ந்து பயணம் செய்து வருகின்றனர். இந்த இரண்டு கிரகங்களின் கூட்டணி பன்னிரண்டு ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் மற்றும் சூரியனின் சேர்க்கை மட்டுமல்லாது குரு பகவானின் பார்வையும் கிடைக்கின்றது.

இந்த காரணத்தினால் சில ராசிகள் கோடீஸ்வர யோகத்தை பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

துலாம் ராசி

 

உங்களுடைய ராசியில் மூன்றாம் வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதன் காரணமாக புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும் மன தைரியம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களால் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். செவ்வாயின் பார்வையில் இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. தேவையற்ற செலவுகள் குறையும்.

விருச்சிக ராசி

 

செவ்வாய் பகவான் உங்கள் ராசியின் அதிபதியாக விளங்கி வருகிறார். உங்களுக்கு குடும்பம் மற்றும் வாக்கு ஸ்தானத்தில் சூரிய பகவான் பயணம் செய்கிறார். மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. அலுவலகங்களில் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. செலவுகள் அதிகமானாலும் சேமிப்பு அதிகமாகும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு ராசி

 

செவ்வாய் பகவான் சூரியனோடு கூட்டணி சேர்ந்திருப்பதால் உங்களுக்கு உற்சாகம் அதிகமாகும். அவ்வப்போது கோபம் ஏற்பட்டாலும் அன்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

டாபிக்ஸ்