தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Rasis Favored By Lord Rahu Ketu

Rahu 2024: ராகு கேதுவால் 2024-ல் யோகம் பெறுகின்ற ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 19, 2024 11:57 AM IST

ராகு கேதுவால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

ராகு கேது
ராகு கேது

ட்ரெண்டிங் செய்திகள்

ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு கேது பதினெட்டு மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இறுதியில் ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் இடமாற்றம் செய்தனர்.

இந்த 2024 ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்ய உள்ளதால் இவர்களுடைய இடமாற்றம் சில ராசிகளுக்கு ராஜயோகத்தை பெற்றுத் தந்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

 

ராகு மற்றும் கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். பண வரவிலிருந்து குறையும் இருக்காது. எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். சிலர் வெளிநாட்டில் குடியிருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பல்வேறு விதமான துறைகளில் உங்களுடைய கடின உழைப்பு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

மிதுன ராசி

 

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து விதமான துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தொழில்நுட்பத் துறைகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகளால் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது மற்றபடி வருமானத்தில் எந்த குறையும் இருக்காது.

துலாம் ராசி

 

ராகு கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். செயல்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். பண வரவில் இருந்து குறையும் இருக்காது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். படைப்பாற்றல் மிக்கவர்களாக உங்களை இந்த சூழ்நிலை மாற்றம்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.