தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Lucky Zodiac Signs With Venus And Mercury Combination

Sukra Luck: சுக்கிரன் புதன் பணமழை.. இந்த ராசிகளுக்கு யோகம்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 10, 2024 03:56 PM IST

சுக்கிரன் மற்றும் புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

சுக்கிரன் மற்றும் புதன்
சுக்கிரன் மற்றும் புதன்

ட்ரெண்டிங் செய்திகள்

புதன் பகவான் கல்வி, அறிவு, சுப வாழ்க்கை உள்ளிட்டவர்களுக்கு காரணியாக விளங்கி வருகிறார். புதன் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. புதன் பகவான் நவகிரகங்களின் இளவரசனாக விளங்கி வருகிறார்.

புதன் பகவான் ஏற்கனவே தனுசு ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் ஜனவரி 18ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் தனுசு ராசிக்குள் நுழைகிறார் இவர்கள் இருவரும் இணைகின்ற காரணத்தினால் சுபயோகம் உருவாக உள்ளது இந்த சுபயோகத்தை பெறப் ராசிகளை காண்போம்.

மேஷ ராசி

 

சுக்கிர பகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை கொடுக்கப் போகின்றேன்றார். திடீரென எதிர்பாராத நேரத்தில் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். பண வரவிற்கான புதிய வழிகள் உண்டாகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும்.

சிம்ம ராசி

 

சுக்கிரன் மற்றும் புதன் சேர்க்கை உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. சிறப்பான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்திலிருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. தொழில் ரீதியாக இருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி அடையும்.

கன்னி ராசி

 

சுக்கிர பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு மகிழ்ச்சியை அதிகப்படுத்த போகின்றது. இவரோடு முதலும் சேர்ந்துள்ளதால் உங்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகின்றது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். விரும்பிய காரியங்கள் அனைத்தும் நடக்கும். வருமானம் பெருகும் பொருளாதாரத்தில் இருந்த சிக்கல்கள் விலகும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.