தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See Here The Zodiac Signs That Will Get Yoga From Lord Venus

Lakshmi Yogam: சுக்கிரனின் மகாலட்சுமி யோகம்.. அதிர்ஷ்டம் பெறுகின்ற ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 29, 2024 11:43 AM IST

சுக்கிர பகவானால் யோகத்தை பெறப்போகும் ராசிகளின் இங்கே காண்போம்.

சுக்கிர பெயர்ச்சி
சுக்கிர பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் சுக்கிர பகவான் மகர ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார். வரும் மார்ச் 7ஆம் தேதி அன்று சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்யப் போகிறார். மார்ச் 30ம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார்.

கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு சுக்கிர பகவான் செய்கின்றார். சுக்கிரனின் இந்த இடமாற்றத்தால் மகாலட்சுமி யோகம் உருவாக்கியுள்ளது. அந்த வகையில் அந்த யோகத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

ரிஷப ராசி

 

கும்ப ராசியில் சுக்கிரன் புகுந்துள்ள காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கப் போகின்றது. பண வரவில் எந்த குறையும் இருக்காது. அற்புதமான பலன்களை உங்களுக்கு கிடைக்கும். சாதகமான சூழ்நிலைகள் அனைத்தும் உருவாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மக்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

துலாம் ராசி

 

சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு அதிக நன்மைகளை பெற்று தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

கடக ராசி

 

சுக்கிர பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும் பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கும்ப ராசி

 

சுக்கிர பகவானின் நன்மை உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது சாதகமான காலமாக அமையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel